தொழில்நுட்ப வெளியில் புதிய வாய்ப்புகளைத் திறவுங்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானத் துறை (Department of Computer Science – DCS), கணினிப் புலத்தில் உங்களுக்குத் தேவையான திறன்கள் மற்றும் அறிவைப் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான சான்றிதழ் கற்கைநெறிகளை வழங்குகிறது. நீங்கள் ஒரு மாணவராகவோ, பணிபுரிபவராகவோ, தொழில் வல்லுநராகவோ, அல்லது உங்கள் கணினித் திறனை மேம்படுத்த ஆர்வமுள்ளவராகவோ இருந்தால், தகவல் தொழில்நுட்ப சகாப்தத்தில் வெற்றிக்கான பாதையை இந்த சான்றிதழ் கற்கைநெறிகள் வழங்குகின்றன.
எங்கள் சான்றிதழ் கற்கைநெறிகள், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தங்கள் கணினித் திறனை மேம்படுத்த ஆர்வமுள்ள தொழில் வல்லுநர்கள் உட்பட, கணணித்துறையில் ஆர்வம் கொண்ட அனைவருக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய திகதிகள்
விண்ணப்ப முடிவுத்திகதி
February 12, 2024
தெரிவுப் பரீட்சை
February 24, 2024
கற்கைநெறிகள் ஆரம்பம்
March 09, 2024
கற்கைநெறிகள் யாவும் நேரடிவகுப்புக்களாக யாழ் பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறையில் இடம்பெறும்
எமது சான்றிதழ் கற்கைநெறிகள் எதற்காக?
உங்கள் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு சரியான தேர்வாக எங்கள் கணினித்துறைச் சான்றிதழ் கற்கைநெறிகள் இருக்கும் என்பதற்கு பல காரணங்களுள்ளன.
மதிப்புமிக்க சான்றிதழ்கள்
உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மதிப்புமிக்க சான்றிதழ்கள்
செயன்முறை அமர்வுகள் மூலம் கற்றல் செயற்பாடுகள்
நேரடிப் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் உங்களின் செயன்முறைத் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு
தொழில் முன்னேற்றத்திற்கான கற்கைநெறிகள்
தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கத் தேவையான அறிவு மற்றும் திறன்களுடன் உங்கள் தொழில்முறை பயணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பாட வடிவமைப்பு
நிபுணத்துவ ஆசிரியர் குழாம்
கணினித்துறையில் துறையில் நிபுணத்துவமான அனுபவம் வாய்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் கற்றுப் பயனடையும் வாய்ப்பு.
நவீன தொழில்நுட்பம்
தகவல் தொழில்நுட்ப அகண்ட வெளியில் நீங்கள் முன்னணியில் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள்
வார இறுதி நாட்களில் கல்வி
உங்களின் நெருக்கடியான காலஅட்டவணையிலும் கணனித்துறை சார்ந்த கல்வியையும் தடையின்றித் தொடர்வதற்கு வசதியாக, வார இறுதி நாட்களில் கல்விச் செயற்பாடுகள்
இருமொழிக் கற்றல்/கற்பித்தல்
எமது சான்றிதழ் கற்கைநெறிகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நாடாத்தப்படுகின்றமையால், மொழியில் உள்ள தடங்கல்களை தவிர்த்து, பாட நுண்பரப்புகளை இலகுவாக அணுகுவதற்கான வசதி
சாத்தியமான கட்டணங்கள்
உயர்தரக் கல்வியின் பலன்களை அனைவரும் அணுகக்கூடியதான கட்டணங்கள்
கணணித்துறையில் உங்கள் வெற்றிப் பயணத்தைத்தைத் தொடங்குங்கள்