Slide 1

கணனிப் புலத்தில் கற்கை நெறிகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞானத் துறை (Department of Computer Science – DCS), உயர்தரத்திலான இளநிலை பட்டப்படிப்புகளை வழங்குவதில் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. கணனிப்புலம் சார்ந்த கல்விக்கான அதிகரித்து வரும் தேவைகளை உணர்ந்து, கணனிப்புலம் சார்ந்த சான்றிதழ் கற்கைநெறிகள் மூலம் சமூகத்திற்கு DCS அதன் சேவைகளைப் பெருமையுடன் விரிவுபடுத்தியுள்ளது.

சிறப்பு சான்றிதழ் கற்கைநெறிகள்

Building Blocks of
Internet of Things

Python
for Problem Solving

Responsive
Web Development

Advanced
Web Development

அனைவருக்குமானது!

எமது சான்றிதழ் கற்கைநெறிகள், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மற்றும் தங்கள் கணனித் திறனை மேம்படுத்த விரும்பும் வல்லுநர்கள் உட்பட, கணணித்துறையில் ஆர்வம் கொண்ட அனைவருக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாடக்குறிப்புகள் ஆங்கிலத்தில் வழங்கப்படும், எனினும் கற்பித்தல் மொழி தமிழ் என்பதால், தமிழில் பேசுவதில் புலமை அவசியம்.

முக்கிய திகதிகள்

விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது

தெரிவுப் பரீட்சை

கற்கைநெறிகள் 
ஆரம்பம்

எமது சான்றிதழ் கற்கைநெறிகள் எதற்காக?

உங்கள் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு சரியான தேர்வாக எங்கள் கணனித்துறைச் சான்றிதழ் கற்கைநெறிகள் இருக்கும் என்பதற்கு பல காரணங்களுள்ளன.

மதிப்புமிக்க சான்றிதழ்கள்

உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மதிப்புமிக்க  சான்றிதழ்கள்

செயன்முறை அமர்வுகள் மூலம் கற்றல் செயற்பாடுகள்

நேரடிப் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம்  உங்களின் செயன்முறைத் திறன்களை  மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு

தொழில் முன்னேற்றத்திற்கான கற்கைநெறிகள்

தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கத் தேவையான அறிவு மற்றும் திறன்களுடன்  உங்கள் தொழில்முறை  பயணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பாட வடிவமைப்பு

நிபுணத்துவ ஆசிரியர் குழாம்

கணனித்துறையில் துறையில் நிபுணத்துவமான அனுபவம் வாய்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் கற்றுப் பயனடையும் வாய்ப்பு.

நவீன தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்ப அகண்ட வெளியில் நீங்கள் முன்னணியில் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள்

வார இறுதி நாட்களில் கல்வி

உங்களின் நெருக்கடியான கால அட்டவணையிலும் கணனி துறை சார்ந்த கல்வியையும்  தடையின்றித் தொடர்வதற்கு வசதியாக, வார இறுதி நாட்களில் கல்விச் செயற்பாடுகள்

இருமொழிக் கற்றல்/கற்பித்தல்

எமது சான்றிதழ் கற்கைநெறிகள் ஆங்கிலம்  மற்றும்  தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடாத்தப்படுகின்றமையால் மொழியில் உள்ள தடங்கல்களை தவிர்த்து, பாட நுண்பரப்புகளை இலகுவாக அணுகுவதற்கான வசதி

சாத்தியமான கட்டணங்கள்

உயர்தரக் கல்வியின் பலன்களை அனைவரும் அணுகக்கூடியதான கட்டணங்கள்

Scroll to Top