யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞானத் துறையால், திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையத்தினூடாக வழங்கப்பட்டுவரும் கணனிப்புலம் சார் கற்கைநெறிகளில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கற்கைநெறிகள், Building Blocks of Internet of Things, Python for Problem Solving, Responsive Web Development, மற்றும் Advanced Web Development எனும் நான்கு தனித்தனி கற்கைநெறிகளாக வழங்கப்பட்டு வருகின்றன.
____________________________________
Building Blocks of Internet of Things:
- இப்பாடநெறியானது, தானியங்கி உலகத்துக்கு அடிகோலும் IoT தொழில்நுட்பம் பற்றி எளிய முறையில் கற்பதற்குகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் இலகு தானியங்கி அமைப்புக்களை கணனி மற்றும் நுண்கட்டுப்படுத்திகளின் உதவியுடன் வடிவமைத்து, அவற்றை நேரடியாகவும், இணையத்தினூடாகவும் ஒருங்கிணைத்து செயற்படுத்துவதற்கு தேவையான திறனை, செய்முறைகளினூடாக அடிப்படையிலிருந்து வழங்குகின்றது.
- காலம்: 10 சனிக்கிழமைகள் (9.00 am – 12.00 pm)
- பயிற்சிக் கட்டணம்: ரூ.15,000.00
____________________________________
Python for Problem Solving:
- கணனியால் தீர்க்கப்படக்கூடிய சிறு சிறு பிரச்சினைகளினூடாக, நவீன தொழில்நுட்பயுகத்தில் பலதுறைகளில் பயன்படுத்தப்பட்டுவரும் Python கணனிமொழியானது அடிப்படையிலிருந்து இக்கற்கைநெறியின் ஊடாகக் கற்பிக்கப்படுகின்றது. நிகழ்உலக நிரலாக்கச் சவால்களுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்கு, நடைமுறை அனுபவத்தை வழங்குவதற்கான செயல்திட்டங்கள் இந்த பாடத்திட்டத்தில் அடங்கும்.
- காலம்: 10 சனிக்கிழமைகள் (1.00 pm – 4.00 pm)
- பயிற்சிக் கட்டணம்: ரூ.13,000.00
____________________________________
Responsive Web Development:
- இணையப் பக்கங்களை உருவாக்குதல் தொடர்பான அடிப்படைகளை வழங்கும் இக்கற்கைநெறியின் ஊடாக, மாணவர்கள் கணனிகள் மற்றும் கைத்தொலைபேசிகளில் பார்வையிடத்தக்க பாதுகாப்பான மற்றும் ஒத்திசைவான இணையதளங்களை, HTML, CSS, JavaScript, மற்றும் PHP போன்ற குறியீட்டு மற்றும் சிறுநிரல் மொழிகளினதும், MySQL போன்ற தரவுத்தளங்களினதும் உதவியினால் உருவாக்கும் திறனைப் பெற்றுக்கொள்வதுடன், அதற்கான அடிப்படை இணையத் தொழில்நுட்பங்களையும் அறிந்துகொள்வர்
- காலம்: 10 ஞாயிற்றுக்கிழமைகள் (9.00 am – 12.00 pm)
- பயிற்சிக் கட்டணம்: ரூ.13,000.00
____________________________________
Advanced Web Development:
- இக்கற்கைநெறியின் ஊடாக, MERN எனப்படுகின்ற MongoDB, Express, React, மற்றும் Node. js போன்ற, தற்போது பிரபலமாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களையும், SQL, NoSQL போன்ற தரவுத்தளங்களையும் பயன்படுத்தி, செம்மையான இணையச் செயலிகளை உருவாக்கும் திறனை மாணவர்கள் பெற்றுக்கொள்வர். இக்கற்கைநெறியில் இணையும் மாணவர்களுக்கு, HTML, CSS, மற்றும் JavaScript என்பவை பற்றிய அடிப்படை அறிவு இருத்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- காலம்: 10 ஞாயிற்றுக்கிழமைகள் (1.00 pm – 4.00 pm)
- பயிற்சிக் கட்டணம்: ரூ.13,000.00
____________________________________
⦿ பெறுமதிமிக்க, பல்கலைக்கழகச் சான்றிதழ்கள்
⦿ க.பொ.த, உயர்தரப் பரீட்சை எழுதிய பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உத்தியோகத்தர்கள், மற்றும் கணனித்துறையில் ஆர்வமுள்ள அனைவருக்குமானது.
⦿ முற்றிலும் செயன்முறைகளினூடான நேரடிக் கல்வி நடவடிக்கைகள்.
⦿ வார இறுதி நாட்களில் வகுப்புகள் – 10 வாரங்கள் (30 மணி நேரம்)
⦿ தமிழ் மொழி மூல வகுப்புகள், ஆங்கிலக் குறிப்புக்களுடன்.
____________________________________
விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது:
15/01/2025
தெரிவுப் பரீட்சை:
18/01/2025
கற்கைநெறிகள் ஆரம்பம்:
01/02/2025
அறிவுறுத்தல்கள்:
- விண்ணப்பங்கள், “www.csc.jfn.ac.lk/expr/application-process” எனும் இணணயப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள நிகழ்நிலை விண்ணப்பப் படிவத்தினூடாக மட்டுமே சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- தருக்க மற்றும் கணிதப் புதிர்கள் உள்ளடங்கிய தகுதிகாண் தெரிவுப் பரீட்சை மூலம் விண்ணப்பதாரிகள் கற்கைநெறிகளுக்கு உள்வாங்கப்படுவார்கள்.
- ஒன்றுக்கு மேற்பட்ட கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிப்பதாயின், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
- முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள், ஒவ்வொரு பாடநெறிக்குமான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500.00 க்கான வங்கிப் பற்றுச்சீட்டின் மென்பிரதியுடன் இணைத்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- கட்டணங்கள் அனைத்தும், வழமையான வைப்புச் சீட்டைப் பயன்படுத்தி, மக்கள் வங்கிக் கிளையொன்றினூடாக மட்டுமே செலுத்தப்படல் வேண்டும்.
- தகுதிகாண் பரீட்சையின் மூலமாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி விபரங்கள் மின்னஞ்சல் ஊடாக அறிவிக்கப்பட்ட பின்னரே பயிற்சிக் கட்டணங்களைச் செலுத்தவேண்டும்.
dcsx@univ.jfn.ac.lk | 021 221 8194 | 021 222 3612